பதினாறு பேறுகள் என்பது, பதினாறு வகையான பாக்கியத்தைக் குறிக்கும். இந்த பேறுகள் வாழ்க்கையில், எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை. சில கிடைக்கும், சில கிடைக்காது, பதினாறு பேறுகளில் தலையாய பேறாகச் சொல்லப்படுவது புத்திரப்பேறு.
பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும்,உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
ஜோதிட ரீதியாக புத்திர தோஷத்தை ஆராயலாம். ஜெனன கால ஜாதகத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது 5-ஆம் இடமாகும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை,சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு.12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால்,வம்சம் விருத்தியாகாது.
எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.

1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
புத்திர தோஷத்தை நீக்கப் பரிகாரம் என்ன?
உங்கள் நட்சத்திரமும் அமா வாசையும் கூடும் ஒருநாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் ஒம்பவசிவ என்று 10 தடவை செபித்து மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசை அன்று தனது சாதகம் சம்பந்தப்பட்ட கோவில் களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந் தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ் வரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகுவை தரி சனம் செய்து அங்கு இராகுவை ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உடனே குழந்தை பிறக்கும்.
சனி ஈஸ்வரன் 5-ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும்.
புத்திர தோஷம் – 51 தீபங்கள் தீபங்களை உங்கள் வீட்டில் நாக படம் உள்ள எந்த தெய்வத்தின் முன்பும் ஏற்றி வாருங்கள்.நவதானிய சுண்டல் செய்து சிருவர்களுக்கு அளியுங்கள்.நல்லது நடக்கும்.
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.
வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.
அருள்மிகுஅமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,
திருமூர்த்திமலை ,
உடுமலைப்பேட்டை.
கல் பாறையில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி ஆண்டவனை வணங்கினால் குழந்தை பாக்கியம்
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள்.அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment